Feed Item

----------------------------------------காதலர் தினம் உருவான கதை------------------------------------------

ரோமாபுரி நாட்டில் கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் `திருமணம் செய்வதால் ஆண்கள் வீரத்தை இழக்க நேரிடும். அவர்கள் போரில் சரியாகப் பங்களிக்கமாட்டார்கள் நாட்டு மக்கள் யாரும் இனி திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஏற்கெனவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தவர்கள் கூடத் திருமணம் செய்யக் கூடாது’ என்ற உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், அரசரின் அறிவிப்பை மீறி பாதிரியார் வாலன்டைன் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

 

இந்தச் செய்தி நாடு முழுவதும் பரவியது. பல காதல் ஜோடிகள் அங்கு படையெடுத்தனர், அவர்களுக்கு வாலன்டைன்  திருமணம் செய்துவைத்தார். இந்தச் செய்தியை அறிந்த  மன்னர், பாதிரியாரைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு, பின் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில் சிறைக் காவலரின் பார்வையற்ற மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்தது. தனக்குக் கண் பார்வை கிடைத்ததை போல, பல மடங்கு சந்தோஷத்தில் இருந்த அஸ்டோரியசுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களின் காதல் விஷயம் தெரியவரவே, அவள் வீட்டில் சிறைவைக்கப்பட்டாள். 

வாலன்டைனுக்கு தண்டனை நிறைவேற்றும் நேரம் வந்தது. தண்டனை நிறைவேறுவதற்கு முன் தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதினார்.  அந்தக் கடிதத்தின் கடைசியில் ``உன்னுடைய வாலன்டைனிடமிருந்து" என்ற வார்த்தை எழுதப்படட்டிருந்தது. அவர் கொல்லப்பட்ட அந்த நாள் கி.பி.270, பிப்ரவரி 14. இந்த நாளைத்தான் உலகம் முழுவதும் பின்னாளில் வாலன்டைன்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

  • 1394