-------------------------------------*இன்றைய காதலர் தின கவிதை*-----------------------------------
*மனைவியை காதலியுங்கள் இல்லறம் நல்லறமாகும்!
செய்யும் தொழிலை காதலியுங்கள் மதிப்பு இன்னும் பெருகும்!
மண்ணை காதலியுங்கள் பொன்னாய் விளையும்!
விண்ணை காதலியுங்கள்
உங்கள் வாழ்வும் நட்சத்திரமாய் மின்னும்!
விவசாயத்தை காதலியுங்கள் விளைச்சல் பெருகும்!
நட்பை காதலியுங்கள் என்றும் நலமாய் இருக்கும்!
சகோதரத்துவத்தை காதலியுங்கள் அன்பு பெருகும்!
சமூகத்தை காதலியுங்கள் வன்மம் குறையும்! இயற்கையை காதலியுங்கள் செயற்கை வாழ்வு மறையும்!
மரங்களை காதலியுங்கள் சுவாசம் இதமளிக்கும்!
பூக்களை காதலியுங்கள் வாசமாய் மலரும்!
மூத்தவர்களை காதலியுங்கள் ஆசீர்வாதமாய் மாறும்!
வீட்டை காதலியுங்கள் என்றும் மகிழ்வு பெருகும்!
நாட்டைக் காதலியுங்கள் நன்மதிப்பு கூடும்!
பிறருக்கு உதவும் பணியை காதலியுங்கள்
உங்கள் சந்ததி மகிழும்!
காதல் என்ற மூன்று எழுத்து அன்பு என்ற மூன்று எழுத்து
மந்திரமாகி மதம் என்ற மூன்று எழுத்தை மாற்றும் தந்திரமாய் மாறுமே!
ஆதலினால் காதல் செய்வீர் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!*
- 1070