கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்கிற பழமொழிக்கு சிறந்த உதராணம் நடிகர் கிங் காங் தான். அவர் ஆள் சிறிதாக இருந்தாலும் மிகப்பெரிய திறமைசாலி. நடிப்பு, நடனம் என அனைத்திலும் அசத்தலாக நடித்திடுவார்.
கிங் காங்கின் மூத்த மகள் கீர்த்தனாவின் திருமணம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. திருமணம் கோவிலில் சிம்பிளாக நடைபெற்றாலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செம கிராண்டாக நடத்தி இருந்தார். திருமணத்துக்கு முன்னர் பிரபலங்களுக்கு கிங் காங் பத்திரிகை வைத்தது மிகவும் டிரெண்ட் ஆனது. முதல்வர் தொடங்கி நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என ஏராளமான முன்னணி நட்சத்திரங்களையும் நேரில் சந்தித்து அவர் பத்திரிகை கொடுத்தது இணையத்தில் வைரலானது.
திருமணம் முடிந்த பின்னர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வடிவேலு கொடுத்த மொய் பற்றி பேசி இருக்கிறார் கிங் காங். வடிவேலு சொந்த ஊரில் கோவில் கும்பாபிஷேக பணிகளில் பிசியாக இருந்ததால் அவரால் கிங் காங் மகள் திருமணத்துக்கு வர முடியாமல் போனதால். இதனால் தன்னுடைய உதவியாளரிடம் மொய் பணத்தை கொடுத்து அனுப்பிய வடிவேலு, கல்யாணம் முடிந்த பின்னர் போன் பண்ணி பேசினாராம். அப்போது இவங்க வரல, அவங்க வரலனு கவலைப்படாத கிங் காங், தமிழ்நாடு முதல்வரே வந்திருக்கிறார். அவர் வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்த மாதிரி என சொல்லி இருக்கிறார். அதோடு வடிவேலு தனது மகளின் திருமணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மொய் செய்திருந்ததாக கிங் காங் தெரிவித்துள்ளார்.