எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் திரைப்படம் தான் 'வாரணாசி'. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்து இருக்கும் திரைப்படம் 1200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிற்கு வழக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய மகேஷ் பாபு, இந்தப் படம் என்னுடைய கனவு. இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. இந்த படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்றார். இந்த விழாவுக்கு மட்டும் ரூ.25 கோடி செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், மகேஷ் பாபு ருத்ரா எனும் கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா மந்தாகினி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ராமாயணக் காலத்தில் தொடங்கி இன்றைய நவீன காலத்துடன் இணைத்து வகையில் 'வாரணாசி' கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும். த்ரிஷா, நயன்தாரா, தீபிகா போன்ற முன்னணி நடிகைகள் ரூ.5-10 கோடி சம்பளம் பெறும் நிலையில் பிரியங்கா சோப்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
