Feed Item
·
Added a post

ஒரு நாள் ஒரு ல‌ண்ட‌ன் பீச்சில் நம்ம பல்பீந்தர் படுத்துக்கொண்டு சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். பல்பீந்தர் கடந்து போன ஒருவ‌ர் நம்மாளை பார்த்து கேட்டார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"ஐ ம் பல்பீந்தர் சிங்" அமைதியாக பதில் வந்தது.

கேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச‌ நேர‌த்தில் மற்றொருவர் அதே கேள்வி கேட்டார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

இந்த முறை லேசாக கடுப்பான பல்பீர், குரலை உயர்த்தி பதில் சொன்னார்,

"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்"

கேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

இந்த முறை உண்மையாகவே கடுப்பானவர் "நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்".

சே, இந்த‌ இட‌மே ச‌ரியில்லை, 'ஒரே தொல்லையாக‌ இருக்கு'ன்னு த‌ன‌க்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற‌ இட‌த்துல‌ போய் ப‌டுக்க‌லாம்ன்னு கிள‌ம்பினார். போகும் வ‌ழியில் இன்னோரு சிங் ப‌டுத்துக் கொண்டிருப்ப‌தை பார்த்தார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?" இந்த‌ முறை கேள்வி கேட்டது, ந‌‌‌ம்ம‌ ஆளு.

"யா..." ப‌டுத்துக் கொண்டிருந்த‌வர்.

உடனே, ந‌ம்ம‌ பல்பீர் மூளையில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்ப் எரிந்த‌து. ப‌டுத்துக் கொண்டிருந்த‌வ‌ரை பார்த்து சொன்னார்,

"தேர், லாட் ஆப் பிப்பிள் ஆர் லுக்கிங் ஃபார் யூ மேன்"...

  • 1102