Feed Item
·
Added article

வெற்றிலை-பாக்கு-சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே பந்தா இல்லாமல் ரொம்ப கேஷுவலாக பேசக்கூடியவர்.

  • எப்பவுமே அந்த தலை கலைந்துதான் கிடக்கும். சரியாக வாரியதுகூட இல்லை. அதேபோல எப்பவுமே கேஷூவல் டீ-ஷர்ட்தான். ஒருவேளை ஷர்ட் போட்டு கொண்டால் அதற்கு ஐயர்ன்கூட பண்ணிக்காமல், சுருக்கம் சுருக்கமாகவே போட்டுக் கொண்டு நடமாடுவார்.
  • என்ஜீனியரிங் பட்டதாரி, எழுத்து திறமை இருந்தாலும், சூப்பராக ஓவியம் வரைவார். இது வெளியே நிறைய பேருக்கு தெரியாது. சாமி படத்தை வரைந்தால் அப்படியே கண்ணில் ஒத்திக்கலாம்.
  • காலையில சாப்பிட ரசம் சாதம் இருந்தால்கூட போதும், அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கும் எளிமைவாதி.
  • சின்ன வயசுல இருந்தே நாய், பூனைனா பயமாம். அதுங்களைப் பார்த்தாலே ஸ்ட்ரெஸ் வந்துடும்னு சொல்லுவார் கிரேஸி.
  • யார்கிட்டயும் கடனும் வாங்க மாட்டார். யாருக்கும் கடனும் கொடுக்க மாட்டார். பணம் கிடைச்சாலும் சரி, செக் தந்தாலும் சரி, நேரா கொண்டு போய் அப்பாகிட்ட தந்துடுவார். செக், எந்தப் பணம் கிடைச்சாலும், அதை நான் எங்க அப்பாகிட்டேயே கொடுத்துடுவேன். அவ்வளவு எதுக்கு, எந்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்டும் வெச்சிக்கிட்டதே இல்லையாம்.
  • இவர் பாட்டுகூட பாடுவார். மீனாட்சி அம்மன் குறித்து நூற்றுக்கணக்கான வெண்பாக்களை பாடிய கவிஞானி.
  • முகம் சுளிக்காத வகையில் வசனங்களை கடைசிவரை எழுதியவர். உடல் சேஷ்டை என்பதே இவர் ஏற்றுக் கொள்ளாத கொள்கை, அது தேவையும் இல்லை என்பது இவரது ஆழ்ந்த கருத்து.
  • யாரையும் காப்பி அடிக்காத, யாருமே காப்பி அடிக்க முடியாத ஒரு நேர்த்தியான கலைஞன்தான் கிரேஸி மோகன்.
  • இவ்வளவு திறமை, குணங்களை பெற்றிருந்தாலும் மிக முக்கியமான ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். இவரது தோற்றம், பேச்சு மேட்டுக்குடிக்கான இயல்புகளை தந்திருந்தாலும், இவரது வசனம் அனைத்து தரப்பு மக்களையுமே சிரிக்க வைத்ததே கிரேஸியின் வெற்றி.. அதனால்தான் பாரபட்சம் பார்க்காமல் அத்தனை பேரையும் அழ வைத்துள்ளது கிரேஸியின் மரணம்.
  • 94