1. காலை 5 நிமிட மூச்சு பயிற்சி: கண்ணை மூடி, மூக்கால் மெதுவாக 4 எண்ணிக்கை மூச்சை இழுத்து, 4 எண்ணிக்கை வெளியே விடுங்கள். தினமும் 10 முறை செய்தால் மனம் அடங்கும்.
2. நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்: நடந்ததை மாற்ற முடியாது, நடக்கப் போவதை நினைத்து கவலைப்படுவதால் பயன் இல்லை. இன்றைய வேலையில் மட்டும் கவனம் வையுங்கள்.
3. குறைவாக போன் (moblie), நிறைய இயற்கை: தினமும் 30 நிமிடம் போன் இல்லாமல் வயல், மரத்தடி, கோயில் பக்கம் நடந்து வாருங்கள். பசுமையை பார்ப்பதே மனதுக்கு மருந்து.
4. எழுதி விடுதல்: மனதில் உள்ள கவலையை ஒரு நோட்டில் எழுதி விடுங்கள். எழுதியதும் மனம் இலகுவாகும்.
5. நன்றி சொல்லும் பழக்கம்: இரவு தூங்கும் முன் இன்று நடந்த 3 நல்ல விஷயத்தை நினைத்து நன்றி சொல்லுங்கள். மனம் தானாக அமைதியாகும்.