அடுத்தடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர அவர் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான டியூடு, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் டியூடு படத்தின் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சுமார் ரூ.25 கோடிக்கு டியூடு படத்தின் ஓடிடி உரிமம் விற்பனையாகி உள்ளதாம். பிரதீப் ரங்கநாதனின் கெரியரில் அதிக விலைக்கு விற்பனையான படமும் இதுதான். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தைவிட பிரதீப் ரங்கநாதனின் டியூடு படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி இருக்கிறது. மதராஸி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் வெறும் ரூ.23 கோடிக்கு தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதன்மூலம் ஹீரோவாக நடிக்கும் 3வது படத்திலேயே சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்து மாஸ் காட்டி இருக்கிறார் பிரதீப்.