கனடாவின் மில்டனில் ஸ்டீல்ஸ் அவென்யூ 1130-ல் அமைந்துள்ள “Massage Addict” கிளினிக்கில் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிபுணர் ஒருவர், ஒரு பெண் மீது மசாஜ் சிகிச்சை செய்யும் போது பாலியல் வன்முறை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் ஒரு வயது முதிர்ந்த பெண் எனவும், சிகிச்சை நேரத்தில் இந்த வன்முறை நடந்ததாகவும் புகார் செய்துள்ளார்.
மிசிசாகாவில் வசிக்கும் 52 வயதுடைய அய்மன் அல் காசம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் பொலிசாருக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.