Feed Item
·
Added article

தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. டோலிவுட் திரையுலகில் இவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், திரையுலகில் இவர் அறிமுகமானது தமிழ் படங்கள் மூலம் தான். அந்த வகையில் 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் 2005-ஆம் ஆண்டு நடிகையாக தன்னுடைய கேரியரை துவங்கினார்.

பிரசன்னா மற்றும் கார்த்தி குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் லைலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, அழகிய அரசுரா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு கை கொடுக்காத நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதும்... தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

அவ்வப்போது சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த, ரெஜினா தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில், வில்லன் கேங்கில் இவரும் ஒருவர். அதுவும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுக்கு மனைவியாக நடித்துளளார். இந்தப் படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப் படத்தில் இன்டர்வெல் பிளாக்கில் அஜித்தின் மனைவியை கடத்த சொன்னது யார் என்பது குறித்த சீக்ரெட்டை ரெஜினா வெளியிட்டிருப்பார். இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக அமைந்திருக்கும்.

ரெஜினாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி ரெஜினா பேசியது வைரலாக நிலையில், இப்போது திருமணம் குறித்து பேசி உள்ள தகவல் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தற்போது 34 வயதாகும் ரெஜினா இன்னமும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.

  • 301