2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பதவிக்கு வந்த மியன்மாரின் ஜனாதிபதியான மைன்ட் ஸ்வே காலமானார் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
உடல்நல குறைவால் மருத்துவ ஓய்வில் ஒரு வருடம் காலம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என மியான்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி யு மியிண்ட் ஸ்வே இன்று காலை 8.28 மணிக்கு காலமானார்.
74 வயதான மியின்ட் ஸ்வே தலைநகர் நேபிடாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் உயிரிழந்தார். ஜனாதிபதி மைன்ட் ஸ்வேவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என இராணுவம் தெரிவித்துள்ளது.