Feed Item
·
Added article

மோகன்லாலின் மகள் நாயகியாக அறிமுகமாகிறார். ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் படத்தின் மூலம் விஸ்மயா மலையாள திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்கிறார். இது ஆசிர்வாத் சினிமாஸின் 37வது படமாகும். சினிமா வெளிச்சத்தில் இருந்து எப்போதும் விலகியே இருந்த விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டு உள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் பேவரைட்டாக இருந்து வந்தது.

'கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்' என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை பென்குயின் புக்ஸ் 2021 இல் வெளியிட்டது. கவிதைகள் மற்றும் கலைகள் நிறைந்த புத்தகம் இது. அமேசானின் 'பெஸ்ட் செல்லர்' பிரிவிலும் இந்தப் புத்தகம் இடம்பிடித்தது. தற்காப்புக் கலையிலும் ஆர்வமுள்ளவர் விஸ்மயா. மொய் தாய் என்ற தாய் தற்காப்புக் கலையைப் பயின்றிருக்கிறார். இதன் பயிற்சி வீடியோக்களை விஸ்மயா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இப்படி இத்தனை நாட்களாக சினிமாவுக்காக ஆயத்தமாகி வந்த விஸ்மயா தற்போது ஒருவழியாக கதாநாயகி ஆகி உள்ளார்.

  • 311