Feed Item
·
Added article

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வந்த நிலையில், தனது பெயரிலேயே புதிதாக ஒரு ஆப் செயலியை அறிமுகப்படுத்தினார். அதில், வீடியோ காலில் பேச 6,000 ரூபாய், பிராண்ட் புரமோஷனுக்கு 50,000 ரூபாய், ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு 1,000 ரூபாய் மற்றும் 3 மாதங்கள், 1 ஆண்டுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும் ஆஃபர்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தர்ஷா குப்தாவின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், சிலர் அவர் மீது புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தர்ஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புரிந்துகொள்ளப்படாதது வலி அல்ல; என்னை நன்கு அறிந்த மனங்கள் கூட, நான் அப்படிப்பட்ட ஒருவரல்ல என்று நம்பிவிடுவதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். உங்களுக்காக ஒரு விளக்கம் உண்டு, தயவுசெய்து என் கேப்ஷனை படிக்கவும் எனக் குறிப்பிட்டு நீண்ட விளக்கமளித்துள்ளார்.

  • 25