Feed Item
·
Added a post

முனிவர் ஒருவர் மிகவும் கர்வம் மிக்கவர். அவர் யமுனை நதிக்கரைக்கு வந்தார். அங்கே படகோட்டி காத்திருந்தான். அக்கரைக்குச் செல்ல வேண்டும் என்றார்.

படகு புறப்பட்டது.

"டேய், படகோட்டி! என்னடா இப்படி மெதுவா படகை செலுத்துறே! வேகமாக போ"

படகோட்டி தன் முழு பலத்தையும் காட்டி படகை தள்ளினான்.

முனிவருக்கு திருப்தி இல்லை .

"அடேய் முட்டாள், இன்னும் வேகமா போடா" முனிவர் கத்தினார்.

படகோட்டியால் அதற்கு மேல் படகை தள்ள முடியவில்லை.

முனிவர் அவனிடம் "படிக்காத உன்னால் என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. உனக்கு ராமாயணம் தெரியுமாடா! குகன் எவ்வளவு வேகமா படகோட்டினான் தெரியுமா?"

"தெரியாது சாமி, என்னாலே முடிஞ்ச வரைக்கும் வேகமா தான் போறேன்"

"ஒழிஞ்சு போ,

மகாபாரதமாவது தெரியுமாடா. அதிலே அர்ஜுனனின் அம்பு வேகமாக பாயுமே, அது மாதிரி சீறிக்கிட்டு ஓட்ட தெரியுமா?"

"அதெல்லாம் இந்த ஏழைக்கு தெரியாது சாமி. கோபப்படாதீங்க.... விரைவா போயிடுறேன்"

"அடேய் மடையனே!

உனக்கு என்ன தான் தெரியும். உங்கள் ஊரில் யாராவது கிருஷ்ணனை பற்றி கதை சொல்லியாச்சும் கேட்டிருக்கியா. அவன் கையில் உள்ள சக்கரம் மின்னல் வேகத்தில் பறக்குமே! அது மாதிரி படகை ஓட்டு"

"கதைக்கெல்லாம் போக நேரமில்லை சாமி"

முனிவர் முனகினார். திடீரென படகோட்டி கத்தினான். "சாமி, உங்களுக்கு எல்லாம் தெரியுமுனு சொன்னீங்களே!

நீச்சல் தெரியுமா?"

"எதுக்குடா கேக்கிற"

படகிலே ஓட்டை விழுந்துடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்திலே தண்ணீரில் மூழ்கிடும். எல்லாம் தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியாமலா இருக்கும். தப்பிச்சு போயிடுங்க"

படகோட்டி தண்ணீரில் குதித்து விட்டான்.

இப்போது புரிகிறதா! எல்லாம் தெரிந்தவர் உலகில் இல்லை.

  • 506