Feed Item
·
Added a post

பேச்சாளர் சுகிசிவம் ஐயா ஒரு ஊருக்கு பேச சென்று இருந்தார். அப்பொழுது தேநீர் அருந்த ஒரு இல்லத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கு சென்ற அவர் குடிக்க ஒரு டம்ளர் பால் கேட்டு இருக்கிறார். குடும்ப பெரியவர் தன் மகனை அழைத்து அம்மாவிடம் சென்று குடிக்க பால் வாங்கி வா என்று பணிக்க. பையன் வேண்டா வெறுப்பாக சமையல் அறை சென்று அம்மாவிடம் பால் வாங்கி வந்து, ஐயா முன்னே இருக்கும் மேசை மேல் வேகமாக வைத்தான், பால் டம்பளர் ஆடியது.

உடனே சுகி சிவம் ஐயா பையனை பார்த்து, அப்பா பால் ஆடுது! என்றாராம்.

உடனே பையன் கோபத்தில் இல்லை பசுவோடது ! என்றானாம்.

  • 508