Feed Item

பிறரிடம் ஒரு கடும் சொல்லைச் சொல்லுமுன் பேச முடியாதவர்களை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் சாப்பாட்டைக் குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கைத் துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்துப் பாருங்கள்.

உங்கள் குழந்தைகளைக் குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்துப் பாருங்கள்.

உங்களுடைய வீட்டைக் குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள்.

உங்களுடைய வேலையைக் குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்.

சோகத்தில் உங்கள் முகம் வாட விடாதீர்கள்.

வாழ்க்கை என்ற பரிசுக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்முறுவல் தவழ விடுங்கள்.

தெளிந்த மனம் தேர்ந்த சொற்களோடு நடைபயிலுங்கள்.

நல்லதே நடக்கும்.

  • 23