தெற்கு ஆஸ்திரேலியாவில் கூப்பர் பேடி என்றழைக்கப்படும் கிராமம் முழுவதுமே பூமிக்கு அடியில் தான் இருக்கிறது.
இங்கு வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் என அனைத்தும் காணப்படுகின்றது.
இந்த நிலத்தடி கிராமத்தில் இணைய வசதி கூட உள்ளதாம்.
இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தைப் பற்றி நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் ஏராளம்.
பாலைவனமாக இருந்த இந்த கூப்பர் பேடி கிராமத்தில் சுரங்கப் பணிகள் 1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இது ஆரம்பத்தில் மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்கமாக இருந்தது.
இப்பகுதியில் சுரங்கங்கள் தோன்றிய பின்னர், மக்கள் காலியாக உள்ள சுரங்கங்களின் உள்ளே சென்று வாழத் தொடங்கியுள்ளனர்.
நாளடைவில் இங்கு காலத்திற்கு ஏற்ப தட்ப வெப்பநிலை சரியாக இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
கோடைக்காலத்தில் இங்கு வெப்பநிலை 45டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பூமியைக் குடைந்து குடியேறியுள்ளனர்.
பூமிக்கு உள்ள குடியேறிய பின்னர் கோடை மற்றும் குளிர் காலங்களில் எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் தட்ப வெப்பநிலை சீராக இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கூப்பர் பேடியின் கிராமத்தில் உள்ள நிலத்தடி வீடுகளுக்கு கோடையில் ஏ.சியோ அல்லது குளிர்காலத்தில் ஹீட்டர்களோ தேவைப்படுவது இல்லை.
இவர்களுக்கு தண்ணீர் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருக்கிற பகுதியிலிருந்து குழாய் மூலமாக கொண்டு வரப்படுகிறது.
இது உலக அளவில் பேமஸ் ஆனதால், இங்கு பல ஹாலிவுட் படங்களும் படமாக்கப்பட்டுள்ளன.
கூப்பர் பேடி இப்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. மக்கள் இங்கு சுற்றுலாவிற்காக வந்து செல்கிறார்கள்.
சுற்றுலா மூலம் கூப்பர் பேடி கிராமம் கணிசமான வருவாயை ஈட்டுகிறது.