Feed Item
·
Added a post

*1888...*

ஜெர்மனியில் கார்ல் பென்ஸ் என்பவர் ஒரு மூன்று சக்கர சைக்கிளில் ஒரு மோட்டரை பொருத்தினார். அதன்பின் காலால் மிதிக்காமல், அது இயங்கியது

ஆனால் அது ஓடுகையில் வரும் சத்தம், புகை எல்லாம் ஊரில் கேலிக்கு உள்ளானது "ஒரு மூன்று சக்கர வண்டியை வீணடித்துவிட்டாயே" என ஊரார் நகைக்க, கார்ல் பென்ஸ் தன் வாழ்நால் கனவு வீணானது என சொல்லி மதுவுக்கு அடிமையாகிவிட்டார். அந்த வண்டியையும் அதன்பின் ஒட்டவோ, முன்னேற்றவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை

அவரது மனைவி பெர்தா ஊருக்கு ஒரு சவால் விட்டார். "இந்த மூன்று சக்கர வண்டியில் என் பெற்றோர் இருக்கும் ஊரான போர்ஸ்ஹைமுக்கு (100 கிமி) போய் திரும்பிவருகிறேன்" என

"100 கிமியா? இந்த மூன்று சக்கர காமடி வண்டியிலா? போய் காட்டு, உன் கணவன் தான் என ஒத்துக்கறோம்" என சொல்ல

அதன்பின் உலகின் முதல் பென்ஸ் காரில் கிளம்பினார் பெர்தா. வண்டி புகையை எழுப்பிக்கொண்டு பாதையில் தலாடியபடி கிளம்பியது. வழியில் பல இடங்களில் மருந்து கடைகளில் நிறுத்தி பெட்ரோல் வாங்கினார் பெர்தா. குதிரைவண்டி லாயங்களில் பிரேக்கை உருவாக்கி பொருத்தினார். எரிபொருள் குழாய் அடைத்தபோது, ஒரு பின்னூசி மூலம் அதை திறந்து சரி செய்தார்

ஒரே நாளில் 100 கிமியை கடந்து பெற்றோரின் ஊருக்கு வந்து "வந்து சேர்ந்துவிட்டேன்" என டெலெகிராம் அனுப்பினார்

"என்னது ஒரே நாளில் 100 கிமியை கடந்துவிட்டாரா? இது என்ன மாயமந்திரம்" என ஊரே திகைத்தது.."கார்ல் பென்ஸ், எனக்கும் ஒரு காரை செய்துகொடுப்பா.."

ஆர்டர்கள் குவிந்தன. பென்ஸ் கம்பனி பிறந்தது

ஒவ்வொரு வெற்றியடையும் மனிதனுக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார்.

  • 153