Feed Item
·
Added article

பிஜு மேனன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்து உடைத்து எறிந்த இன்னொரு furniture. சொல்லப்போனால் இவர் வந்தது 15 வருஷத்துக்கு முன்பே. மாதவன் நடித்த, சீமாமா இயக்கிய 'தம்பி' படத்தின் மூலம் தான் தமிழுக்கு வந்தார் என்று நினைக்கிறன். அந்த படம் தவிர்த்து மற்றது எல்லாம் மசாலா படம். பணம் கிடைத்தால் போதும் என்று நடித்தாரா, இல்லை தமிழ் சினிமா பற்றி அறியாமல் ஏமாந்தாரா தெரியவில்லை. ஆனால் பாவம்... கொஞ்ச நாளில் மறக்கப்பட்டார்.

ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து வித்தியாயசமான படங்களை செய்து வந்தார். மோஹன் லால், மம்மூட்டி க்கு கொஞ்சமும் குறையாத நடிப்பு அரக்கன் தான். அங்கேயும் இன்னும் இரண்டாம் நிலை நடிகர் தான். ஆனால் அவரது நடிப்பே யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். சீரியஸ், நகைச்சுவை, யதார்த்தம் என்று அனைத்திலும் ஆல் ரவுண்டர் தான். சந்தேகம் இருப்பவர்கள் இவர் நடித்த 'வெள்ளிமூங்கா' படத்தை பாருங்கள். அதன் தமிழாக்கமான 'முத்தின கத்திரிக்கா'வையும் பாருங்கள். புரியும்! சற்று முன்பு வந்த தலவன், கருடன், தங்கம் போன்ற படங்களை பாருங்கள். ஆச்சரியத்தில் உறைந்து போனாலும் தவறில்லை...

பிஜு மேனன் நடித்த ஒரு ரெட்ரோ படம் தான் 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்'. தலைப்பே வித்தியாசமா இருக்குல்ல? ஆமா கதையும் அப்படிதான். பிஜு மேனன் இதில் ஓர் சிறு கிராமத்தின் சண்டியராக வருகிறார். அவருக்கும் ஊரில் வாலிபர் ஒருவருக்கும் ஏற்பட்ட ஈகோ தான் கதை... விருப்பம் உள்ளவர்கள் பாருங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல், எதார்த்த படம் ஒன்றை காண விரும்புவோர் நிச்சயம் பார்க்கலாம்.

  • 718