காமராஜர் படிக்காதவர். அவரால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? அவருக்கு பூகோளம் பற்றித் தெரியுமா?" என்றெல்லாம் பலர் பிரச்சினைகளைக் கிளப்பினார்கள்.
அதற்கு காமராஜர், "நான் கல்லூரியில் படிக்காதவன். பூகோளம் தெரியாதவன் என்றெல்லாம் சொல்கின்றார்கள். ஆனால் எனக்கும் பூகோளம் தெரியும். தமிழ்நாட்டில் உள்ள ஊர்களையெல்லாம் நான் பெரும்பாலும் அறிவேன்.
அவற்றிற்குப் போகும் வழி, இடையில் வரும் ஆறுகள், ஏரிகள், அவற்றின் பயன்கள் பற்றி எனக்குத் தெரியும். அவற்றின் மதிப்பு தெரியும். எந்தெந்த ஊரில் எப்படியெப்படி ஜீவனம் கிடைக்கின்றது, என்னென்ன தொழில் பிரதானம் என்பதையும் நேரில் பார்த்திருக்கின்றேன். வட இந்தியாவிலும் பல இடங்களைத் தெரிந்து வைத்திருக்கின்றேன். இதெல்லாம் பூகோளம் இல்லை கோடுகள் இழுத்து, படம் போட்ட புத்தகம்தான் பூகோளம் என்றால் அவை எனக்குத் தெரியாததாகவே இருக்கட்டும்" என்றார்.
அவருடைய உண்மையான பூகோள அறிவுதான் அவரைப் 'படிக்காத மேதையாக' உலகிற்குக் காட்டியது.