நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி எந்த வீடியோவையும் வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அந்த வீடியோவில், எல்லாரும் எப்படி இருக்கீங்க? இனிமேல் வீடியோவில் பேச மாட்டேன் என்றும், கொஞ்சம் நாள் அனைவரிடம் இருந்தும் நான் தூரமாக இருப்பேன் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவில் பேசிக்கொண்டிருக்கிறேன். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், அதாவது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில், நானும் என்னுடைய அக்காவும் பெங்களூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு ஷிப்ட் ஆகப் போகிறோம். இதற்கு காரணம் பெங்களூரில் எங்களுக்கு என்று யாரும் இல்லை.
எனக்கு சினிமா நடிப்பது எப்போதுமே எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால் சினிமாவை எப்போதோ முடித்துக்கொண்டு வேண்டாம் என்று சொல்லி விலகிவிட்டேன். என்னுடைய அக்காவை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடுங்கள் என்று தொடர்ந்து பலர் வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எங்களுக்கு வீடும் கிடைக்கவில்லை. அதனால் என்னுடைய அக்கா மட்டும் ஏன் அனாதை ஆசிரமத்திற்கு சென்று கஷ்டப்பட வேண்டும்? நானும் அவருடன் இருந்து, நாங்கள் இருவரும் அனாதை ஆசிரமத்திலேயே இருந்துகொள்ளலாமே என்று இந்த முடிவுவை எடுத்திருக்கிறேன்.
விஜயலட்சுமியின் பின்னால் அந்தக் கட்சி இருக்கிறது, இந்தக் கட்சி இருக்கிறது, அவருக்கு கோடிக்கணக்கில் செட்டில்மெண்ட் செய்துவிட்டார்கள், வீடு கொடுத்தாங்க, பங்களா, கார் கொடுத்தாங்க என்று பல கதைகளை சொன்னாங்க. விஜயலட்சுமி அதற்காகத்தான் வந்தார், அதற்காகத்தான் மிரட்டினா என்று பல்வேறு விதமாக கதைகளை சொன்னாங்க. ஆனால்,இப்போ உண்மை என்ன என்பதை இந்த வீடியோவை பார்த்த பிறகு மக்களே தெரிந்துகொள்வார்கள். விஜயலட்சுமி இவ்வளவு காலமாக போராடினா இப்போ, பெங்களூரில் உள்ள ஏதோ ஒரு ஆசிரமத்தில் அனாதையா இருக்கா என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நடிகை விஜயலட்சமி அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
நடிகை விஜயலட்சுமி பூந்தோட்டம் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்து இருக்கிறார். பெங்களூரில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமி, தற்போது தன்னையும் தனது அக்காவையும் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத காரணத்தால் இருவரும் ஆசிரமத்திற்கு செல்ல இருப்பதாக இந்த வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்றுள்ளது.