Feed Item
·
Added article

சாவித்திரி சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார்.

எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு பையில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.

  • 1130