ஊர்வசி கதாநாயகி மட்டுமல்ல நகைச்சுவை நடிகையும் கூட எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதோடு ஒன்றி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்க கூடிய குணசித்திர நடிகையும் கூட. ஆச்சி மனோரம்மா எப்படி நடித்தாரோ அதே மாதிரி நடிக்க கூடிய திறமை ஊர்வசிக்கு உண்டு. கோவைச்சரளாவை விட நகைச்சுவையில் சிறந்தவர் ஊர்வசி.மனோரம்மாவுக்கு பிறகு குணசித்திர நடிகை ஊர்வசி என்று சொல்லாம்.
நிறைய படங்களில் பைத்தியமாக நடித்திருப்பார் வயிறு வலிக்க சிரிப்பு கேரண்டி. விசுவின் படத்தில் ஊர்வசி பிரமாதமாக நடித்திருப்பார் மாயபஜார்னு ஒரு படத்தில் ஊர்வசியின் நகைச்சுவை செம்மையா இருக்கும். அதே மாதிரி நிறைய படங்கள் உண்டு.
இப்ப சில வருடங்களாக அம்மா வேடத்தில் நடித்திருப்பார் நம்மால் அந்த காட்சியை பார்த்து அழாமல் இருக்கவே முடியாது. ஜெ.பேபி ன்னு ஒரு படம் அந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார் அது ஒரு உண்மை கதையும் கூட அந்த கதையில் நம்ம அம்மா அந்த இடத்தில் இருந்தால் என்ன மனநிலை நமக்கு இருக்குமோ அந்த மாதிரி நடித்திருப்பார் படம் பார்த்து முடித்தப் பிறகு பல நாட்களுக்கு அதன் தாக்கம் இருக்கும். அந்த மாதிரி ஒரு படம் மனசை கசக்கி பிழிகிற ஒரு கதை அதற்கு விருது கிடைத்திருக்க வேண்டும். ஏன் கிடைக்கலன்னுதான் தெரியல அந்த கதையில் ஒரு சீன் ஊர்வசி மனநலம் பாதிக்கப்பட்டு கண்ட இடங்களில் அவமானம் படுகிறாரேன்னு கோவத்தில் மகன் பிடித்து தள்ளிவிடுவான் அதன் பிறகு மகன் சாப்பிடும் போது அம்மாவின் நினைவு வர அம்மா சாப்பிட்டுச்சான்னு தெரியலயேன்னு தேடி வர அங்கே ஊர்வசி சோகமா உட்கார்ந்து இருப்பார் மகனை பார்த்ததும் சாப்பிட்டியாப்பான்னு கேட்க அந்த காட்சி இருக்கே காட்சி கல்லான மனசையும் கரைக்கும். அந்த மாதிரி ஒவ்வொரு சீனும் கண்ணில் நீர் வடிக்க செய்யும்.
அதே மாதிரி அப்பத்தான்னு ஒரு படம் அதுவும் ரொம்ப சூப்பரா இருக்கும் அருமையா நடிச்சிருப்பாங்க ஒரு நாயை வைச்சி அதோடு நடிச்ச விதம் செம்மையா இருக்கும் பார்க்காதவங்க பாருங்க யூடியூப்பில் இருக்கு. இப்படி ஒவ்வொரு படத்துக்கும் வேற லெவல்ல நடிக்கிற திறமை பெற்றவர். வாமனன் படத்தில் கூட சந்தானமும் ஊர்வசியும் நடிச்ச் காட்சியில் சிரிக்காதவர் யாருமே இருக்க முடியாது. ஊர்வசிக்கு துணை நடிகைக்கான தேசிய விருது கிடைச்சிருந்தாலும் ஜெ.பேபி படத்துக்கு ஏன் விருது கொடுக்கல? எதன் அடிப்படையில் விருது கொடுக்கப்படுகிறதுன்னு செருப்படி மாதிரி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அவர் கேட்பது சரிதான் எதன் அடிப்படையில் விருது கொடுக்கிறார்கள்? சரியான நடிப்புக்கு விருது கிடைக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.
திறமையானவர்கள் இந்த மாதிரி கேள்வி கேட்க வேண்டும் அப்பதான் நியாயம் கிடைக்கும். ஊர்வசியின் ஆதங்கம் சரியே..
உண்மையிலேயே J . பேபியும், அப்பத்தாவும் ஊர்வசியின் பண்பட்ட நடிப்பை சொல்லும் படங்கள். அதிலும் அப்பத்தாவில், சில சீன்களில் நமக்கே கண்களில் தண்ணீர் வந்து விடும். மகன் தன்னை மதிக்கவில்லை! என்று தெரிந்தும், தன் மகன் கட்டிய அபார்ட்மெண்டில், ( குடும்பத்தோடு ஊருக்கு போவதற்காக, அம்மாவை வீட்டுக்கும், நாய்க்கும் காவலாக) வைத்தவுடன், அப்ப வீட்டை பார்த்து கொள்ளத்தான் வரவழைத்தானா? என்று கேட்கும் போது, வருத்தத்தில் கண்ணீர் வரும்.
அந்த காம்பௌண்டில், அவரும், நாயும் அடிக்கும் லூட்டியில், சிரித்து சிரித்து கண்ணீர் வரும்.