Feed Item
·
Added a post

நெப்போலியன் ஒரு வீரராக இருக்கும் பொழுது அவருடைய படை ஓர் ஊரில் முகாமிட்டு இருந்தது. ஒரு நாள் பகல் நேரத்தில் எல்லா வீரர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். விளையாடி கொண்டும், பேசிக் கொண்டும், உல்லாசமாய் வெளியே அலைந்துகொண்டும் இருந்ததார்கள் .

நெப்போலியன் மட்டும் தம்முடைய கூடாரத்தினுள் அமர்ந்து நூல்களைப் படித்துக் கொண்டிருந்தார்! அப்பொழுது அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் அங்கு வந்தாள். மற்ற படைவீரர்கள் எல்லா உல்லாசமாகத் திரியும்போது நெப்போலியன் மட்டும் ஓர் கூடாரத்தில் அடங்கிக் கிடப்பதைக் கண்டு அவளுக்கு நகைப்பு ஏற்பட்டது

படித்துக்கொண்டிருந்த நெப்போலியனிடம் சென்று, "மற்ற படை வீரர்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வெளியே விளையாடி கொண்டிருக்கிறார்கள். நீ மட்டும் ஒரு நாளாவது வெளியே காணோமே... அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறாய்?-- . நீ என்ன கோஷாப் பெண்ணா? என்று கேட்டாள்

நெப்போலியன் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நெப்போலியன் பிரெஞ்சு பேரசராகி தம்முடைய படைகளுடன் முன்னொரு முகாமிட்டிருந்த இடத்திற்கு வர நேரிட்டது. குதிரை மீது நெப்போலியன், முன்பு குறிப்பிட்ட அந்தப் பெண்மணி எதிர்பாராமல் சந்தித்தனர்.

அம்மா... என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று வினவினார்…

சற்று யோசித்துவிட்டு, "ஆமாம்.. எப்போதோ... பார்த்த நினைவிருக்கிறது.. என்று பதிலுரைத்தாள் அவள்

முன்னொரு சமயம்...இதே இடத்தில்..கூடாரத்திற்குள்ளிருந்து ஒருவன் படித்துக்கொண்டிருக்கும்போது, மற்ற வீரர்களெல்லாம் விளையாடுகின்றனர்.. நீ மட்டும் கூடாரத்திற்குள் அடங்கிக் கிடக்கிறாயே.. நீ என்ன கோஷாப் பெண்ணா?.... என்று தாங்கள் கேட்டீர்கள்... அவன் தான் நான்.. நானும் அவர்களைப்போல் விளையாடிக் கொண்டிருந்திருந்தேனானால் இன்று நானும் அவர்களைப் போல் காணாமல் போயிருப்பேன்.. என்று சொன்னார் நெப்போலியன்.

நேரத்தைச் சீராகச் செலவழித்தவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்..

  • 597