Feed Item
·
Added article

விஷ்ணு விஷால், ஐஸ்​வர்யா லட்​சுமி, கருணாஸ், முனீஸ்​காந்த், காளி வெங்​கட், கருணாகரன், மோக் ஷா உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘கட்டா குஸ்தி 2’.

செல்லா அய்​யாவு இயக்​கிய இப்​படத்தை ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் மற்​றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்​துள்ளது. கடந்த 3ம் தேதி வெளி​யான இப்படம் வெற்​றிகர​மாக ஓடிக்​கொண்​டிருக்​கிறது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​ குழுவினர் கலந்து கொண்​டனர்.

நடிகர் விஷ்ணு விஷால் பேசும்​போது, “இந்​தப் படத்​தின் வெற்றி எனக்கு மிக​வும் சிறப்​பானது. முதலில் ஐசரி கே.கணேஷுக்கு நன்றி. ஒரு தயாரிப்​பாள​ராக அவர் என்​மீது முழு நம்​பிக்கை வைத்து சுதந்​திரம் தந்​தார்.

அந்த நம்​பிக்​கையே இந்த வெற்றிக்கான காரணங்​களில் ஒன்​று. சினிமா என்​பது ஒரு குழு முயற்​சி. இதில் பணி​யாற்​றிய ஒவ்​வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞரும் தங்​களது பங்​களிப்பை முழு​மை​யாக வழங்​கிய​தால்தான் இன்று குடும்​பங்​கள் கொண்​டாடும் வெற்றிப்படமாக இது மாறி​யுள்​ளது.

இயக்​குநர் செல்லா அய்​யா​வுடன் எனக்கு 11 ஆண்​டு​களாக நட்பு உள்​ளது. அவர் மீது எப்​போதும் எனக்கு முழு நம்​பிக்கை இருந்​தது. நல்ல குடும்​பப் படங்​களைத் தொடர்ந்து வழங்​கும் திறமை அவருக்கு இருக்​கிறது.

எதிர்​காலத்​தில் தமிழ் சினி​மா​வின் முன்னணி வணிக இயக்​குநர்​களில் ஒரு​வ​ராக அவர் உயர்​வார். இன்​றைய ரசிகர்​கள் விழிப்​புணர்​வுடன் ​படங்​களை ரசிக்கிறார்கள். அதனால் ஒவ்​வொரு படத்​தை​யும் மிகுந்த பொறுப்புடன் உரு​வாக்க வேண்டிய அவசியம் உள்​ளது” என்​றார்​.

  • 21