இந்தி நடிகை மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். அவரும் நடிகர் தனுஷும் காதலித்து வருவதாகக் கடந்த சில மாதங்களாகச் செய்திகள் வெளியாகி வந்தன.
சில விழாக்களில் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டதை அடுத்து இச்செய்தி வேகமாகப் பரவியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. அதை மிருணாள் தாக்குர் மறுத்திருந்தார். ‘எனக்கே தெரியாமல் என் திருமணம் பற்றிய செய்திகள் வருகின்றன’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக புதிய தகவல் பாலிவுட்டில் வெளியாகி இருக்கிறது. எனினும், இதை யாரும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.