மிக பெரிய இண்டஸ்ரியலிஸ்ட் அவர்....
வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி அவருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அவர் அதற்கு எந்தவித வாக்குவாதமோ ஆட்சேபனையோ தெரிவிக்காமல் சத்தமில்லாமல் செலுத்திவிட்டு சென்றார்.
வருமான வரி அலுவலர்களுக்கோ ஒரே ஆச்சரியமும் அதிர்ச்சியும்.
நாம் தான் சரியாக ரெய்டு பண்ணவில்லை போலும் என நினைத்து அவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பினார்கள் கணக்கில் தவறுள்ளதால் அதற்கு அபராதமாக இரண்டு கோடி என தெரிவிக்கவும் அவரும் மௌனமாக வந்து இரண்டு கோடி அபராதத்தை செலுத்திவிட்டு நன்றி கூறி சென்றார்.
மீண்டும் வருமான வரி அலுவலர்களுக்கு ஆச்சரியம்.
சரி இப்போது ஐந்து கோடிக்கு ஏதோ ஒரு காரணம் கூறி நோட்டீஸ் அனுப்பினர்.
அடுத்த நாள் காலையில் ஒரு லாரியை அலுவலகம் முன் நிறுத்திய தொழிலதிபர்
அலுவலர்களிடம்,"அடிக்கடி என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.
இதோ லாரியில் எனது மிஷினை கொண்டு வந்துள்ளேன்.
உங்களுக்கு தேவையான அளவு அச்சடித்துக் கொண்டு மிஷினை உடனே திருப்பி தரவும் என்றார்..