திருவள்ளுவர் அவர்களின் உண்மையான ஓவியம் அல்லது புகைப்படம் எதுவும் இல்லை. அவரின் வாழ்க்கை வரலாறே முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், இன்று நாம் பார்க்கும் வள்ளுவர் உருவத்தை முதன்முதலில் வரைந்தவர் ஓவியர் K. R. வேணுகோபால் ஷர்மா.
அந்த ஓவியம் பின்னர் பல்வேறு அரசியல், சமூக, ஆன்மிக மற்றும் இலக்கிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரியார் ஈ.வே.இராமாசாமி, C. N. அண்ணாதுரை, M. கருணாநிதி, எம்.ஜி. இராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் அந்த உருவத்தை பாராட்டியுள்ளனர்.
1964ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் M. பக்தவத்சலம் காலத்தில், அந்நாள் துணை ஜனாதிபதி ஜாஹீர் ஹுசைன் (Zakir Husain) அவர்களால் சென்னை சட்டசபையில் அந்த ஓவியம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் அதையே தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு நாட்டுடைமையாக்கியது. மேலும் இந்திய அஞ்சல் துறையும் அந்த உருவத்தைக் கொண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.