நடிகை ரெஜினா தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்தவர். இப்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. கடைசியாக தமிழில் அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதேசமயம் ரெஜினாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் ஆண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் பிறந்தவர் ரெஜினா. நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்த அவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
அந்த படத்தின் மூலம் அடையாளம் கிடைத்ததை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படிதான் அமைந்தது. அதன்படி அவர் ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, தலைவியில் கெஸ்ட் ரோல் என பல படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் ராஜதந்திரம், மாநகரம் தவிர்த்து மற்ற படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.
தொடர்ந்து கருங்காப்பியம், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு; பம்பர் பரிசாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அர்ஜுனுக்கு ஜோடியாக வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருந்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அது கொஞ்சம் அவருக்கு ஏமாற்றம்தான். அதேசமயம் அவரது லுக்குக்கும், நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது மட்டும் கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.
அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் கேசரி பார்ட் 2, ஜாத் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவையும் பெரியளவு அவருக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக தமிழ், மலையாளத்தில் வெளியான ஆனந்தன் காடு படத்தில் நடித்தார். அடுத்ததாக தமிழில் பிளாஷ்பேக், மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படங்கள் வரவிருக்கின்றன.
இந்நிலையில் ரெஜினாவின் பேட்டி ஒன்று ஆண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரெஜினா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "நான் சொல்லபோவது ஏ விஷயம்தான். மேகியும், ஆண்களும் ஒன்றுதான். இரண்டுமே இரண்டு நிமிடங்கள் மட்டும்தான்" என்று டபுள் மீனிங்கில் பேசினார். இதைப் பார்த்த நெட்டிசன்களோ ...... ரெஜினா என்ன இப்படி சொல்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறர்கள்.