Feed Item
·
Added a post

பொதுவாக பெரியவர்கள் சொல்கின்ற ஒரு விஷயம் என்னவென்றால் யாரையும் அவ்வளவு எளிதாக நினைத்துவிடக் கூடாது. நம்மைவிட சிறியவர்களோ பெரியவர்களோ அவர்களிடம் இருந்து என்ன நல்ல விஷயங்கள் இருக்கிறதோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது, ஜப்பானியர்களிடம் இருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது பற்றிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

நேர்மை:

மற்றவர்களைப் போல அல்லாமல் ஜப்பானியர்கள் தான் உலகில் அதிக அளவில் நேர்மையாளர்களாக இருப்பார்களாம். அதேபோல அதேஅளவு நேர்மையை மற்றவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்களாம். பர்சனலாகவே பொய் சொல்வதைத் தவிர்ப்பவர்களாக இருக்கிறார்கள்.

வேலை:

அடுத்தவர்களுடைய வேலையில் தலையிடாமல் தன்னுடைய வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பொது_இடங்கள்:

பொது இடங்களில் செல்லுகின்ற பொழுது அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்கள். அதனால் பொது இடங்களில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

செல்போன்:

ரயில், பஸ் பயணங்களில் செல்போன் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. சத்தமாகப் பேசினாலும் பிடிக்காது. முடிந்தவரையில் பேசுவதைத் தவிர்த்து அமைதியாகவே பயணங்கள் மேற்கொள்கிறார்கள்.

தாய்மொழி:

தங்களுடைய தாய்மொழியை அவர்களைவிடவும் அதிகமாக நேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.

பயணங்களின் போது:

ரயில் பயணங்களில் அல்லது பஸ்ஸில் போகின்ற பொழுது, கூட்டமாக இருந்தாலும் கூட்டமே இல்லாவிட்டாலும் சரி, இறங்குகின்ற பொழுது வரிசையாக நின்று யாரையும் இடித்துக் கொள்ளாமல் ஒருவர் பின் ஒருவராக வரிசையாகத் தான் இறங்குவார்கள்.

சரியான நேரம்:

நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராத ஒரு விஷயம் இதுதான். அலுவலகத்துக்கு மிகச் சரியான நேரத்துக்குச் சென்று விடுவது ஜப்பானியர்களின் பழக்கமாக இருக்கிறது.

வேலை நேரம்:

வேலை நேரத்தில் செல்போனைப் பயன்படுத்தவே மாட்டார்கள். எதை கத்துக்கிறோமோ இல்லையோ இத கட்டாயம் கத்துக்கணும்ப்பா. வேலை நேரத்தில் ஓபி அடிக்கும் பழக்கமே ஜப்பானியர்களுக்குக் கிடையாதாம். 12 மணி நேரம் வேலை இருந்தாலும் முறையாகவும் சரியாகவும் வேலை செய்து முடிப்பார்களாம். ரொம்ப சிஸ்டமேட்டிக்காக இருப்பார்கள்.

விடுமுறை நாட்கள்:

விடுமுறை நாட்களை பொழுது போக்கிற்காகவே பெரிதும் பயன்படுத்துவார்கள்.

மற்றவர்களுடைய பொருள்:

நம்மகிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்னு அவங்ககிட்ட இருக்கு. அடுத்தவர்களுடைய பொருளுக்கு எப்போதும் ஆசைப்பட மாட்டார்கள்.

சுற்றுப்புற சுத்தம்:

சுற்றுப்புறச்சூழல் மீது அக்கறையும் கவனமும் கொண்டிருப்பதில் உலக அளவில் ஜப்பானியர்களுக்கு நிகர் ஜப்பானியர்கள் தான். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, உதாராணமாக குப்பைகளையெல்லாம் மட்கும் மட்காத குப்பைகளாகப் பிரித்து தனித்தனி கவரில் போட்டு அப்புறப்படுத்துவது, சாலைகளில் எச்சில் துப்புவதைத் தவிர்ப்பது, பொது இடங்களில் அசுத்தங்களைச் செய்யாமல் இருப்பது, குறிப்பாக, சாலைகளில் பொது இடங்களில் புகைப் பிடித்தலைத் தவிர்ப்பது ஆகியவற்றைக் கடைபிடிக்கிறார்கள்.

உதவி செய்தல்:

அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் படிக்கட்டுகள் மற்றும் எக்ஸ்லேட்டர்களில் போகின்ற பொழுது, ஓரமாக நிற்பது, அவசரமாகச் செல்கின்றவர்களுக்கு வழிவிடுவது போன்ற நாகரீகங்களைப் பின்பற்றுகிறார்கள். மொழி தெரியாத வெளிநாட்டினர் யாராவது உதவி கேட்டால் சிறிதும் சளைக்காமல் அவர்களுக்கு உதவி செய்வார்கள். வழி தெரியவில்லை என்றால் அந்த இடத்துக்கு வழிகாட்டி அழைத்துக் கொண்டே செல்வார்கள்.

  • 613