எம்ஜிஆரின் அந்த காட்சி படமாக்கும் போது நான் இருக்க மாட்டேன்..பல வருடம் கழித்து மனம் திறந்த சரோஜாதேவி
நடிகர் எம்ஜிஆரோடு அதிகமான திரைப்படங்களில் நடித்த சரோஜாதேவி தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
தான் எம்ஜிஆரின் திரைப்படங்களில் சில காட்சிகள் எடுக்கும் போது மட்டும் இருக்க மாட்டேன் அது எனக்கு பிடிக்காது என்று அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.
வெளிப்படையாக பேசக்கூடிய சரோஜாதேவி சொன்ன காரணத்தை கேட்டு ரசிகர்கள் வியந்து போய் இருக்கின்றனர்.
கன்னடத்து பைங்கிளி அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜாதேவி 70ஸ், 80ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகி. தமிழ் சினிமாவில் முதன் முதலில் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் ஆரம்பத்தில் கன்னட திரைப்படத்தில் தான் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழி சினிமாக்களிலும் நடித்த சரோஜாதேவி எந்த மொழிகளிலும் தனக்கு வேறொருவரை டப்பிங் பேசுவதை விரும்ப மாட்டாராம். அவருடைய சொந்த குரலில் எல்லா படங்களிலும் டப்பிங் பேசி இருக்கிறார். அதற்காகவே அவர் பல மொழிகளையும் கற்று இருக்கிறார்.
அந்த நேரத்தில் அவர் ஒரு நேரத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வருடத்திற்கு 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்தாலும், அனைத்து திரைப்படங்களுக்கும் அவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார். மனதில் பட்டதை உள்ளபடி பேசும் சரோஜாதேவி தன் சினிமா அனுபவங்கள் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
எம்ஜிஆர் உடன் 26 படங்கள் சிவாஜியுடன் 22 படங்கள் என முன்னணி கதை நாயகர்களோடு அப்போது அதிகமான ஜோடி சேர்ந்த நடிகை என்ற பெயரை சரோஜாதேவி தட்டி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் அனைத்து நடிகர்களுமே நடித்த பெருமை பெற்றவர் இவர்தான்.
இவர் என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் அவருடைய அம்மா பேச்சை மீறாதவராகத்தான் இருந்தாராம். அதனாலேயே இன்று வரை அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று கூட சரோஜாதேவிக்கு தெரியாதாம். எல்லாவற்றையும் அவருடைய அம்மா தான் பார்த்துக் கொள்வாராம்.
நடிகை சரோஜாதேவிக்கு சண்டை போடுவது பிடிக்காதாம். அதனாலேயே எம்ஜிஆர் படங்களில் சண்டைக்காட்சிகளில் படப்பிடிப்பு நடக்கும் போது அவர் அங்கு இருக்க மாட்டாராம். படபிடிப்பில் இருக்கிறவர்களே சரோஜாதேவியை வெளியே அனுப்பி விடுவார்களாம். இல்லையென்றால் அவருடைய காட்சிகளை மட்டும் முதலில் படமாக்கிவிட்டு அவரை அனுப்பி விடுவார்கள் என தன்னுடைய அனுபவங்கள் குறித்து சரோஜாதேவி பேசியிருக்கிறார்.