Feed Item
·
Added article

அட நம்ப காலா பட வில்லன் தான். !! அப்படி என்ன தான் இவர் செய்தார் என்று கேட்கும் கூட்டத்திற்கு :

  • மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கிட்டத்தட்ட 62 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் தாராளமாக நன்கொடை அளித்தார்.
  • மராத்வாடாவில் சுமார் 112 விவசாயிகளின் குடும்பங்களை அவரே பார்வையிட்டார். அப்போது மின்துண்டிப்பு நடக்க விவசாயிகள் தங்களது செல்போன் வைத்து டார்ச் அடித்து அவரை வரவேற்றனர்
  • அவரது அமைப்பு இப்போது நாக்பூர், லாதூர், ஹிங்கோலி, பர்பானி, நந்தேடு, அவுரங்காபாத் போன்ற பகுதிகளில் 700 பேருடன் (விவசாயிகளை) இணைக்க திட்டமிட்டுள்ளது.
  • இவரின் அமைப்பு 2015இல் தொடங்கியதாக்கும். செப்டம்பர் 2015 இல், படேகர் நாம் அறக்கட்டளையை நிறுவினார், இது வறட்சி நிலைமைகளால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உதவி வழங்குவதற்காக செயல்படுகிறது
  • இவரது அறக்கட்டளை ஏற்கனவே வெற்றிகரமாக உழவர் நலனுக்காக மக்களிடமிருந்து 22 கோடி ரூபாய் நன்கொடை வாங்கியுள்ளது.
  • விவசாயிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக உலர்ந்த ஏரிகள் மற்றும் ஆறுகளை மீண்டும் நிரப்புவதே அறக்கட்டளையின் முக்கிய நோக்கம்.

இவரின் 90 சதவீத வருமானத்தை இவர் நன்கொடை மற்றும் தொண்டு செய்ய பயன்படுத்தி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

  • 102