Feed Item
·
Added article

பிரேமம் படம் மூலமாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாரி 2 நல்ல வரவேற்பு கொடுத்த போதிலும் அமரன் படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வரும் சாய் பல்லவிவியின் இயற்கை பேரழகிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

என்னதான நட்சத்திர நடிகையாக இருந்தாலும் சாய் பல்லவி, கல்வியை பாதியில் விடவில்லை. அவர் எம்பிபிஎஸ் படித்துள்ளார். நடிகையாக இருந்தாலும் கல்வியை முடித்திருப்பதைப் பார்த்தால், அவருக்கு கல்வியுடன், ஆர்வத்தைப் பின்பற்றுவதும் பிடிக்கும் என்பது தெரிகிறது.

சாய் பல்லவி பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அவர் வந்த பாதையை, தனது சிறிய கிராமத்தை எதையும் மறக்கவில்லை. தனது பணி நெறிமுறைகள் மற்றும் வளர்ச்சிக்காக அவர் எப்போதும் தான் வந்த பாதையை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார்.

சாய் பல்லவி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவையே, அது பிரேமம் மலர், கார்கி, ராமாயணத்தின் சீதை என சாய் பல்லவி நடித்த கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

சாய் பல்லவி பிரபலமான பிறகும் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெறவில்லை, சில படங்களில் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தன்னம்பிக்கை மட்டும் குறையவில்லை. தோல்வியில் அழாமல் திடமான நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் முன்னேறினார் சாய் பல்லவி, இதே தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டும்.

சாய் பல்லவியிடமிருந்து பின்பற்ற வேண்டிய முக்கியமான பாடங்களில் ஒன்று நேர்மை மற்றும் எளிமை. எப்போதும் எளிமயாக இருக்க கூடியவர். அதுமட்டுமின்றி என்னதான விளம்பரங்களுக்காக பெரிய தொகைகள் சம்பளமாக கொடுக்கப்பட்டாலும் தவறான கருத்துக்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் அவர் நடிக்க மறுத்துள்ளார். இதற்கு சிறந்த உதாரணமே முகப்பொலிவு கிரீம்ஸ் (fairness creams)

சாய் பல்லவி மிகச் சாதாரண வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கிறார். என்னதான நடிகையாக இருந்தாலும் அவர் எப்போதும் சமூக வலைதளங்களில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டது கிடையாது. தான் உண்டு தனது நடிப்பு, டான்ஸ் உண்டு என்று இருக்கிறார். மனநலம் மற்றும் உள் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.

  • 312