Feed Item
·
Added article

அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது. இவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். குடும்பத்துடன் இந்தத் தம்பதி நிம்மதியாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துவருகிறது.

அஜித் இப்போது நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் கவனத்தை செலுத்திவருகிறார். அதற்கு ஷாலினி தன்னால் முடிந்த அத்தனை சப்போர்ட்டையும் கொடுத்துவருகிறார். பெரும்பாலும் அஜித் ரேஸுக்கு செல்வதற்கு முன்பு அருகே ஷாலினியும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். தன் மனைவிக்கு நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்த பிறகுதான் ஏகே வண்டி ரேஸில் சீறிப்பாயும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பார்த்து பலரும், ஜோடினா இப்படித்தான் இருக்கணும் என பூரிப்பார்கள்.

இதற்கிடையே அஜித்தின் அடுத்த படம் பற்றிதான் அனைவரது கவனமும் இருக்கிறது. டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கும் அஜித்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவே இல்லை என தொடர்ந்து பேசப்பட்டது. இதனையடுத்து அஜித்தே படத்தை தயாரிப்பார் என்று சொல்லப்பட்டாது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் ரீ என்ட்ரி தரவிருக்கிறாராம்.

அதாவது, தனது அடுத்த படத்தை தயாரிக்க முடிவெடுத்த அஜித்; நடிக்கவும் செய்வதால் முழு கவனத்தையும் தயாரிப்பு பணிகளில் செலுத்த முடியாது. அதன் காரணமாக தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்துமாறு ஷாலினியிடம் ஏகே சொன்னதாகவும்; அதற்கு ஷாலினியும் ஓகே சொல்லிவிட்டது என்றும் தகவல்கள் வட்டமடிக்கின்றன. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 61