இந்தோ- சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு புது டெல்லியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஐரோப்பிய திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸ் வளாகத்தில் நவ.17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கும் இப்பட விழாவில் 6 படங்கள் திரையிடப்படுகின்றன.
நவ.17-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரெஞ்சு காமெடி டிராமா திரைப்படமான ‘ஜிம்’ஸ் ஸ்டோரி’யும், அன்று இரவு 7 மணிக்கு பின்லாந்து படமான ‘ஜேவிடா’வும் திரையிடப்படுகின்றன.. ஒரு பெண்ணின் 3 வெவ்வேறு காலகட்டங்களை விவரிக்கும் படம் இது.
நவ.18-ம் தேதி மாலை 5 மணிக்கு பல்கேரிய த்ரில்லர் படமான ‘த டிராப்’, அன்றிரவு 7 மணிக்கு ருமேனியா நாட்டுத் திரைப்படமான, ‘த்ரி கிலோமீட்டர்ஸ் டு த எண்ட் ஆஃப் த வேர்ல்டு’, நவ.19-ம் தேதி மாலை 5 மணிக்கு ஹங்கேரி படமான ‘ஃபோர் சோல்ஸ் ஆஃப் கொயோட்’, இரவு 7 மணிக்கு ‘டேஞ்சரஸ் ஜென்டில்மேன்’ என்ற போலந்து திரைப்படம் ஆகியவைத் திரையிடப்படுகின்றன. இத்தகவலை இந்தோ-சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
