பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, அவரின் மனைவி கன்னிகா ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
சினேகன் தற்போது மருத்துவர்களின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து கவலைப்படும் ரசிகர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். சினேகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
சினேகன் மருத்துவமனையில் இருப்பதால், கன்னிகாவும் தனது இரண்டு குழந்தைகளுடன் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார். உதவிக்கு கூட யாரும் இல்லாததால். குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.