Feed Item
·
Added a post

வாங்க தரகு….. நீங்க சொன்ன பொண்ணை நேத்து போய் பார்த்தோம்….. பொண்ணு அழகா தான் இருக்குது…..

பிறகென்ன… இந்த இடத்தையே முடிச்சிடவேண்டியது தானே …. நல்ல இடம்பா. ……

எல்லாம் சரி. …. ஜாதகம் பொருந்தலயே…….தோஷம் இருக்குன்னு சொல்லிட்டாங்க…

யாருக்கு பெண்ணுக்கா….. உங்க பையனுக்கா…..

பையனுக்குதான்….செவ்வாய் தோஷம் 'ன்னுசொல்லிட்டாங்க….

அதுக்கென்ன இப்போ…ஜாதகத்தை மாத்தி கொடுத்திட்டா போச்சு… …

அது எப்படி தரகு….. இது வாழ்க்கை பிரச்சனைஆச்சே,ஆயிரங்காலத்துபயிராச்சே. …..

அட போப்பா….. எந்த ஜாதியிலும் இப்ப பொண்ணே கிடைக்கலே… அவ்வளவு டிமாண்ட்….. பொண்ணுக்கு அலைய வேண்டியதா இருக்குது….

பின்னாடி கண்டு பிடிச்சா,ரொம்பபெரிய தப்பா நினைக்க மாட்டாங்களா ,…

தப்பாவது . ….. ஒலிம்பிக் கப்பாவது ……ஒரு குழந்தைபிறந்தா எல்லாம் சரியாயிடும்பா. …

நீங்க இப்படி சொல்றீங்க. …. சரி அப்ப….நீங்களே,உங்களுக்குதெரிஞ்சஒரு ஜோசியர் கிட்ட போய் என் பையன்ஜாதகத்தை மாத்தி எழுதி கொண்டாங்களேன்.. தேவையானபணம் தரேன்…

சரிங்ககொடுங்க. ……..

(தரகர் பையன் ஜாதகத்தை வாங்கி கொண்டு போய் நல்ல படியாக எழுதி கொண்டு வருகிறார். … அடுத்த நாள்)

என்ன தரகு. பையன் ஜாதகம் எழுதியாச்சா ……..

ஆமா ஸார்… எந்த தோஷமும் இல்லாத சுத்தமான ஜாதகம்…இந்தாங்க……அப்படியே இந்த பொண்ணு போட்டாவை பாருங்க பொண்ணு டபுள் டிகிரி . .. K.k..நகரில் சொந்த வீடு…. போய் பாருங்க. …

சரி தரகு….மாப்பிளை பத்தி சொன்னீங்களா…. …IT …, கம்பெனி வேலை. ….. எல்லாம் சொன்னீங்களா…..

எல்லாம் சொன்னேன்….. நானும் கூட வரேன்….. பையன் ஜாதகமும்கொடுத்தாச்சி…. நாளைக்கு போகலாம்….. ஆனா ஒண்ணு கல்யாணம் நீங்க தான் செய்யணும்….

சரி தரகு……ஒத்துக்கறேன்….. என்னபத்து லட்சம் செலவாக போகுது…அவ்வளவு தானே…

அப்பசரி….. இந்த இடம் முடிஞ்சுடும் நாளைக்கு போகலாம்…..

(பெண் பார்க்கும் படலம் முடிந்து…. ஜாதகம் பார்த்துஒரு நல்ல நாளில் திருமணமும்முடிந்தது. தரகர் கமிஷன் வாங்கி கொண்டு போனவர் 15மாதங்கள் கழித்து வந்தார்.. அவர் வந்த நேரம் அவர்களுக்குஒரு ஆண் குழந்தை பிறந்தது)

ஸார் வணக்கம், .. ….. மருமகள் எப்படி இருக்கிறா. ஆண் குழந்தை பிறந்து இருக்கு. இப்ப சந்தோசமா….

அது சரி…. ஏன் தரகு இப்படி செஞ்சிட்டீங்க…

நான் என்ன செஞ்சேன்பா….

பொண்ணு அமாவாசையிலே ….. பொறந்து இருக்கா …. மூல நட்சத்திரம் வேற……பொய் சொல்லி பொண்ணு ஜாதகத்தையே மாத்தி கல்யாணத்தைமுடிச்சிட்டீங்களே…

ஸார் ரெண்டுமே டுபாக்கூர் ஜாதகம் தான்.. . ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க.. …இப்ப பெரும்பாலும் ஜாதகத்தை இப்படி கோல் மால் பண்ணி தான் நிறைய பேர் கொடுக்கிறாங்க.. 8..கெட்ட எண்……13ம் கெட்ட எண்…. ஆனாரெண்டும் சேர்த்தா கூட்டு தொகை.. 3வருது இல்லையா.. அது சூப்பர் நம்பர். …இப்போ…. பாருங்க. ஆண் குழந்தை பிறந்துள்ளது.. இதிலிருந்து தெரியவில்லையா…

அது என்னமோ கரெக்ட்.

(உள்ளே இருந்துமருமகள் குரல்****தரகர் மாமாவை இருந்து சாப்பிட்டுவிட்டு போக சொல்லுங்க மாமா….)

என்ன தரகரே.. உங்களை மாமா'ன்னு என் மருமகள் கூப்பிடறா…

இந்த விஷயம் தெரியாதா… …உண்மையிலேயே உங்க மருமகளுக்குநான் தாய் மாமன் ஸார்….

  • 57