கனடாவின் ஓரஞ்ச்வில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பல வாகன விபத்தில் 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் ஹைவே 10-ல், ஃபோர்த் அவென்யூ மற்றும் பிராட்வே ஸ்ட்ரீட் இடையில் இரண்டு பிக்கப் லாரிகள் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் ஒரு வாகன ஓட்டுனர் (75) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு வாகன ஓட்டுனர் சிறிய காயங்களுடன் தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து விசாரணைக்காக பல மணி நேரம் சாலை மூடப்பட்டு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த முதியவரின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.