Feed Item
·
Added a news

கனடாவில் கில்ஹாம் (Gillam) பகுதியில் காணாமல் போன மலையேறி ஓருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நோர்வே நாட்டுப் பிரஜை ஓருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலின் போது 29 வயது நோர்வே மலையேறி மரணமடைந்த நிலையில் கண்டுபிடித்தனர்.

ஹெய்ஸ் Hayes நதி மேற்கே புறத்தில் ஹெலிகாப்டர் விமானி மலையேறியின் உடலைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

பினன்ர் மீட்பு குழுக்கள் மற்றும் பொலிஸார் நிலத்தில் சென்று, காணாமல் போன 29 வயது நோர்வே ஹைக்கரின் உடல் என்பதை உறுதிப்படுத்தினர்.

குறித்த நோர்வே மலையேறி கடந்த 15ம் திகதி முதல் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • 740