கௌரவ் சாப்ரா என்னும் இந்தியர் கனடாவில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, பொலிசார் ஒருவர் அவரை நிறுத்தியுள்ளார். அப்போது அவரது காருக்குள் windscreenஇல் பொருத்தப்பட்டிருந்த மொபைலில் வீடியோ ஒன்று ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அவருக்கு 615 டொலர்கள் அபராதம் விதித்துள்ளார் அந்த பொலிசார். ஆனால், இனவெறுப்பு காரணமாக அவர் தனக்கு அபராதம் விதித்ததாகத் தெரிவிக்கும் கௌரவ், அந்த பொலிசார் தனது பர்ஸிலிருந்த பணத்தைப் பார்த்து எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்டதாகவும் கூறுகிறார்.
அவர் இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களைப் பார்த்தவர்கள், கார் ஓட்டும்போது வீடியோ பார்ப்பது சட்டப்படி தவறுதான் என்கிறார்கள்.
கௌரவ் அந்த பொலிசாரிடம் வீடியோ ஓடுவது உண்மைதான். ஆனால், தான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை, சாலையில்தான் கவனம் வைத்திருந்தேன் என்கிறார். அந்த விடயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாம், அங்கு அவர் வீடியோ பார்த்தாரா இல்லையா என்பதை முடிவு செய்யலாம் என்கிறார் அந்த பொலிசார்.
இணையவாசிகளும், இது இனவெறுப்பு இல்லை. அவர் தன் கடமையைத்தான் செய்தார் என்கிறார்கள். அது மட்டுமல்ல, புலம்பெயர்ந்தோர் எப்போதுமே தாங்கள் வாழும் நாட்டுக்கு உண்மையாக இருப்பதையே நிரூபிக்க முயல்வார்கள். அந்த பொலிசாரும் ஒரு புலம்பெயர்ந்தோர்தான். ஆக, இது இனவெறுப்பு இல்லை. கனடாவில் கார் ஓட்டும்போது வீடியோ பார்ப்பது தவறுதான் என்கிறார்கள் இணையவாசிகள்!