- இந்தியா . தமிழ்நாட்டில் - திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ளது கதவு மலைநாதன் சிவன் கோவில்.
- மலைப்பகுதிகளில் வெளி உலகிற்கு தெரியாமல் மறைந்திருக்கும் அழகிய இடங்கள் ஏராளம். அவற்றில் தாண்டிக்குடி அருகே உள்ள கதவு மலை சிவன் கோவில் காண்போரை கவர்ந்திழுக்கிறது.
- மலைக்கு நடுவே இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் ஒரு பழமையான சிவன் கோவில்.
- பிரம்மாண்டமான பாறையில் குகை வடிவில் காணப்படும் இந்த கோவிலில் உள்ள குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
- மலைச்சரிவில் ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் வண்ணம் அமைந்துள்ள இக்கோவிலுக்கு குறிப்பிட்ட இடத்திற்கு இடத்திற்கு மேல் வாகனங்களில் செல்ல இயலாது.
- பாறையை தகர்த்து அமைத்த ஒத்தையடிப் பாதையில் நடந்து தான் இக்கோவிலை அடைய முடியும்.
- பாதையின் இரு புறமும் கதவு போல பாறைகள் அமைந்துள்ளன.
- 1300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் இது.
- மலைமுகடுகளுக்குள் சரிவான அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
- சித்திரை தமிழ் புத்தாண்டு பிறப்பன்று நிறைய மக்கள் தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும் நடைப்பயணமாக இங்கு வந்து ஈசனை தரிசிப்பார்கள்.
- இங்கு அமாவாசை, பௌர்ணமி தினங்களும் விசேஷமானவை.
- தாண்டிக்குடி, பாச்சலூர், வடகவுஞ்சி பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- சரியான சாலை வசதி இல்லாததால் நடைபயணமாக இக்கோவிலை அடைய வேண்டியுள்ளது.
- இங்கு ஏராளமான குகைகளும், பாறை ஓவியங்களும் உள்ளன.