Feed Item
·
Added a post

ஒரு சமயம் பிக்கு ஒருவர் புத்தவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“பகவரே, தாங்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடையமுடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் ஏன் அதை அடைவதில்லை.

இன்றே நீ ஒரு காரியம் செய். இந்த பகுதியிலுள்ள மனிதர்களைச் சந்தித்து அவர்கள் அடைய விரும்புவது என்ன என்று கேட்டுஅவற்றை மனதில் பதிவு செய்து கொண்டு வா”

புத்தபெருமான் இவ்வாறு சொன்னதும் அந்த பிக்கு அன்றே அந்தவேலையைத் தொடங்கினார்.

அந்த ஊரில் இருந்த பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து புத்தர் கேட்கச் சொன்னது போலவே தாங்கள் அடைய விரும்புவது எதை என்று கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தைத்தெரிவித்தார்கள்.

அன்று மாலை பிக்கு புத்தரைச் சந்தித்தார்.

“நான் சொன்னவாறு செய்தாயா?” என்று புத்தர் கேட்க அதற்கு பிக்கு “ஆம். அவ்வாறே செய்தேன்” என்றார்..

“கேட்டவற்றைச் சொல்”

பிக்கு தான் சந்தித்த மனிதர்கள் அடைய விரும்பிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் கூறினார்.

இவற்றை அமைதியாகக் கேட்ட புத்தர்“இவர்களில் ஒருவர் கூட மோட்சத்தை அடைய விரும்புகிறேன் என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.

அதற்கு அந்த பிக்குவும் “ஆம்” என்றார்.

“விரும்பாத ஒன்றை எவ்வாறு அடைய முடியும்?”

புத்தர் அந்த பிக்குவிடத்தில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க பிக்குவும் அந்த கேள்வியில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு அமைதி காத்து நின்றார்.

  • 398