Feed Item
·
Added article

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஆகஸ்ட் எனர்ஜி" என்ற கேப்ஷனுடன் நண்பர்களுடன் இருப்பது, செல்ஃபி எடுப்பது என போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதோடு காருக்குள் அமர்ந்து தனது கைகளால் முகத்தை மூடியபடி கதறி அழுவது போன்ற ஒரு வீடியோவை அதில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சமந்தா ஆனந்த கண்ணீரில் அழுகிறாரா... அல்லது சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறாரா... அல்லது உண்மையிலேயே சோகத்தில் அழுகிறாரா என்று எதுவுமே புரியாமல் அவரது ரசிகர்கள் பெரும் குழம்பி போனார்கள். கர்ப்பமாக இருக்கும் இந்தச் சூழலில் சமந்தா இப்படி அழுவது போன்ற வீடியோவைப் பகிர்ந்திருப்பது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு சமந்தா?" உங்களுக்கு என்ன பிரச்சனை?, மன அழுத்தம் கூடாது, என பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை சமந்தா, கடந்த 2025ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணம் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் பைரவி தேவி சிலை முன்பு மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தனது கணவரான ராஜ் நிடிமோரு எழுதிய கதையில், இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியானது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா மிரட்டி இருந்தார். இப்படம் நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, தான் தாயாகப்போகும் மகிழ்ச்சியான விஷயத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

  • 35