று வயதில் இருந்தே சினிமாவில் கலக்கி வருபவர் சிம்பு. இவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது நடிப்பில் பிசியாக இருக்கிறார். கடைசியாக சிம்பு நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பெரியளவில் கைகொடுக்காததால் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் சிம்பு தற்போது வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வட சென்னை யூனிவர்ஸில் வரும் என கூறப்படுவதால் அதன்மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் உள்ளது.
நடிகர் சிம்பு நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். அந்த வகையில் அவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் வல்லவன். அப்படம் கடந்த 2006-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ஆனால் அப்படத்திற்கு முன்பே அவர் இயக்கியதாக கூறப்படும் மற்றொரு படமும் உண்டு. அதுதான் மன்மதன். இப்படத்தின் இயக்குனர் ஏஜே முருகன் என போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவருக்கும் சிம்புவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால், மன்மதன் படத்தின் சில காட்சிகளை சிம்புவே இயக்கினாராம்.
மன்மதன் படத்தில் சிம்பு இயக்கியதாக கூறப்படும் காட்சிகளில் காதல் வளர்த்தேன் பாடலும் ஒன்று. யுவன் சங்கர் ராஜா இசையில் நா முத்துக்குமார் வரிகளில் பாடகர் கேகே உருகி உருகி பாடிய இப்பாடலுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தப் பாடல் காட்சியை மட்டும் நடிகர் சிம்பு 50 நாட்கள் படமாக்கினாராம். தற்போதைய காலகட்டத்தில் 50 நாட்களுக்குள் ஒரு படத்தையே எடுத்து முடித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு பாடல் காட்சியை சிம்பு 50 நாட்கள் படமாக்கிய சம்பவத்தை ஓ மை கடவுளே, டிராகன் போன்ற படங்களின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தினமும் வேறொரு சீனை எடுக்க செல்லும்போதெல்லாம், காலையில் எங்கெல்லாம் நல்ல நல்ல லொகேஷன் இருக்கிறதோ, அங்கெல்லாம் படப்பிடிப்பை நடத்துவாராம். அப்போது அவர் டைரக்ஷன் பழகி வந்ததால், ரோப்பில் பறந்து பறந்து ஃபீல் பண்ணுவது போன்ற காட்சியையெல்லாம் எடுத்துப் பார்த்தாராம். இப்படி அவரின் இசை ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என அஸ்வத் கூறி இருக்கிறார். சிம்புவின் 51வது படத்தையும் அஸ்வத் தான் இயக்க உள்ளார். அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அப்படத்திற்கு காட் ஆஃப் லவ் என்றும் பெயரிட்டுள்ளார்கள். விரைவில் இதன் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.