Feed Item
·
Added a news

கனடாவின் கிழக்கு ஒண்டாரியோவில் மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மாலை 7.15 மணியளவில் Highway 401 நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய பாதையில், நபனீ (Napanee) நகரத்திற்கு கிழக்கில், கவுன்டி வீதி 4 மற்றும் கவுன்டி வீதி 6 இடையிலான பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுமார் 50 பயணிகள் இருந்த ஒரு கோச் பேருந்து நெடுஞ்சாலையில் ஓரமாக கவிழ்ந்ததாக தகவல் கிடைத்ததாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிருக்கு ஆபத்தான காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை,” என அவர் கூறியுள்ளார்.

அவசர சேவையினர் சம்பவ இடத்தில் இருந்து அனைத்து பயணிகளுக்கும் உதவி வழங்கியுள்ளனர். சுமார் எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் காயங்களின் தீவிரம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் நேர்ந்த வேளையில் அந்தப் பகுதியில் சாலை வழுக்கலாக இருந்ததாக சமூக ஊடக பதிவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • 45