Feed Item
·
Added a post

ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல

வீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்*

வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்*

எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு *ஐஸ்வர்யம்*

அம்மா கையால் உணவு *ஐஸ்வர்யம்*

மனைவி பார்க்கும் ஓரக் கண் பார்வை *ஐஸ்வர்யம்*

பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் *ஐஸ்வர்யம்*

இளஞ்சூடு சூரியன் *ஐஸ்வர்யம்*

பவுர்ணமி தினத்தில் நிலவு *ஐஸ்வர்யம்*

உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் *ஐஸ்வர்யம்*

பால் வடியும் குழந்தையின் சிரிப்பு *ஐஸ்வர்யம்*

இயற்கை அழகு *ஐஸ்வர்யம்*

உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு *ஐஸ்வர்யம்*

அவசரத்தில் உதவும் நண்பன் *ஐஸ்வர்யம்*

புத்தியுள்ள குழந்தைகள் *ஐஸ்வர்யம்*

குழந்தைகள் படிக்கும் படிப்பு *ஐஸ்வர்யம்*

கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் *ஐஸ்வர்யம்*

ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு *ஐஸ்வர்யம்*

ஐஸ்வர்யம் என்றால் கையால் எண்ணும் பணக்கட்டு அல்ல

கண்ணால் பார்க்கும் உலகம் *ஐஸ்வர்யம்*

மனசு அடையும் சந்தோஷம் *ஐஸ்வர்யம்*

*நம்மை சுற்றி நல்ல உண்மையான நண்பர்கள் இருந்தால் *ஐஸ்வர்யம்...*

My list of *Aishwaryams* :-

எத்தனை வயது ஆனாலும் உரிமையுடன் போடா வாடா எனப்பேசும் பால்ய நண்பர்கள் *ஐஸ்வர்யம்*

கணவன் மனதில் ஒரு பொருளை நினைக்கும் போதே (கேட்காமல்) கொண்டு வரும் அன்பான மனைவி *ஐஸ்வர்யம்*

ஆயுள் இறுதி வரையிலும் சின்ன வயதில் உடன் பிறப்புகளுக்கு செய்த நல்லவைகளை அவர்கள் மறக்காமல் மதிப்பது *ஐஸ்வர்யம்*

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து இருந்தாலும், வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் சொந்தமாக ஒரு பாதுகாப்பு இருப்பது *ஐஸ்வர்யம்*

பெற்ற பிள்ளைகளை பாசமுடன் வளர்ப்பதும், நல்ல கல்வி அளிப்பதும், பின் பணியில் அமர்வதும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் *ஐஸ்வர்யம்*

பேரப்பிள்ளைகள் பெறுவதும், அவர்கள் தாத்தா-பாட்டியுடன் விளையாடி வளர்வதும் *ஐஸ்வர்யம்*

நோயற்ற வாழ்வும், இறுதிவரை யாருக்கும் சிரமம் கொடுக்காமல், வாழ்க்கைப் பயணம் முடிவதும் *ஐஸ்வர்யம்*

  • 22