🌹1915-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி கோவையில் பிறந்த இவர், வறுமையான சூழலில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார்.
🌹 இரும்பு பட்டறையில் சுத்தியல் அடிக்கும் பணியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பால் வியாபாரம், சோடா விற்பனை எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து, விடாமுயற்சியால் திரையுலகின் சிகரத்தைத் தொட்டவர்.
🌹வீரமாருதி தேகப்பயிற்சி சாலை' மூலம் உடல் உறுதியைப் பேணிய இவர், திரைப்படத் தயாரிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டு,
🌹தனது சகோதரர் எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
🌹முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது, இவரது வெற்றிகரமான திரைப் பயணத்திற்கு அடித்தளமிட்டது.
🌹எம்.ஜி.ஆரை வைத்து 'தாயைச் காத்த தனயன்', 'வேட்டைக்காரன்', 'விவசாயி' உள்ளிட்ட 17 வெற்றிப் படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. எம்.ஜி.ஆருடன் மட்டுமின்றி, இந்தித் திரையுலகிலும் ராஜேஷ் கன்னா நடிப்பில்
🌹ஆத்தி மேரே சாத்தி' என்ற பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தார். இவரது 'தேவர் பிலிம்ஸ்' நிறுவனம் விலங்குகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு பல படங்களை இயக்கி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
🌹சிறந்த முருக பக்தரான தேவர், தனது திரைப்பட லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கு அர்ப்பணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
🌹'தெய்வம்', 'துணைவன்', 'ஆட்டுக்கார அலமேலு' போன்ற ஆன்மீக மற்றும் சமூகப் படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
🌹 1970-71-ல் கலைமாமணி விருது பெற்ற இவர், 63-வது வயதில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
🌹வேட்டைக்காரன் படத்திற்காக வேட்டைக்காரனாக எடுத்த ஸ்டில் இது.