Feed Item
·
Added article

நடிகர் ஆனந்தராஜ் வில்லனாக நடித்தாலும், அவரது நடிப்பை பலரும் ரசிப்பார்கள். காரணம், அவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும்.

ஆனந்தராஜ் போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் தான். அவர்தான் தனது படங்களில், ஆனந்தராஜ் நடிக்க வாய்ப்பளித்திருந்தார்.

ஒரு படத்தின் ஷூட்டிங் அசோக் நகர்ல நடக்குது. அப்போ அந்த ஏரியா டெவலப் ஆகல. நான் சொல்றது 80களுக்கு முன்னால கூட இருக்கலாம்.

ஷூட்டிங் பார்க்க கூட்டம் வரும் இல்லையா, அந்த மாதிரி நிறைய பேர் கூட்டமாக இருக்கறாங்க

அப்போ வந்து எல்லோரும் பார்த்தாங்க. பார்த்துட்டு எல்லாம் ஒரே ஆரவாரம் பண்ணினாங்க. அப்போ ஷூட் முடிச்சிட்டு நானும், விஜயகாந்த் எல்லாம் பிளாட்பார்ம்ல உட்கார்ந்து இருக்கோம். கேரவன் எல்லாம் கிடையாது. அப்போ பக்கத்துல அவரோட ரசிகர்கள் எல்லாம் நிக்கறாங்க.

அப்போ அந்த வழியா ஒருத்தர் பைக்குல வந்தாரு. வந்தவரு எல்லாத்தையும் தள்ளுங்க, தள்ளுங்க அப்படீன்னுட்டு சொல்லிட்டு போயிட்டே இருக்கார்.

ரோட்டை மறிச்சு இப்படி ஷூட்டிங் பண்ணினா எப்படிய்யா போறது? ன்னு சொல்லிட்டு அந்த இடத்தை கிராஸ் பண்ணி போயிட்டார். நான் அவரை மட்டும் அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கேன்.

சினிமா பார்க்காதவர்களுக்கு நாம சாதாரணமாக ஆட்கள். சினிமா பிடிக்காவர்களுக்கு நாம் மிக சாதாரணமானவர்கள்.

நாம ஒண்ணும் ஆகாயத்துல இருந்து குதிச்சு வரவில்லை. ரொம்ப நார்மலாக ஆளுங்கதான். ஆண்டவன் கொடுத்த பிச்சை இது. இந்த துறையில் இருப்பதால் நாம் செய்கிறோம் அப்படீன்னு விஜயகாந்த் சொன்னார்.

உண்மையில் என்னோட கண்ணை திறந்தவர் அவர்தான் என்கிறார் நடிகர் ஆனந்தராஜ்,

  • 1214