Feed Item
·
Added a post

பொதுவாக நம்மில் சிலருக்கு முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் அவர்களுடைய கைகளும் கால்களும் வெள்ளை நிறத்தில் இருக்காது.

சிலபேருக்கு கைகளும் கால்களும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், ரொம்பவும் கடினமான தோலின் மூலம் சொரசொரப்பாக இருக்கும்.

இப்படிப்பட்ட எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் ஒரு சூப்பரான எளியவழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை :

எலுமிச்சை பழச்சாறு

தக்காளி பழச்சாறு

பேக்கிங் சோடா

செய்முறை :

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச் சாறை ஊற்ற வேண்டும். அதன் பின்பு தக்காளி பழத்தில் இருந்து உங்கள் கைகளாலேயே பிழித்து 4 டேபிள் ஸ்பூன் அளவு சாறு எடுத்து கொள்ளுங்கள்.

இந்த இரண்டு சாறையும் கலந்து, இதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சோடா உப்பை போட்டு நன்றாக கலக்கவேண்டும்.

சோடா உப்பு கொஞ்சம் பொங்கி வரத்தான் செய்யும். அந்த நுரை அடங்கும் வரை நன்றாக கலக்கி விடுங்கள். அதன் பின்பாக இதை ஒரு காட்டன் துணியில் அல்லது பஞ்சில் தொட்டு உங்களது கையின் மேல் பக்கத்திலோ அல்லது பாதங்களின் மேல் பக்கத்திலோ தடவி விட வேண்டும்.

முதலில் லேசாக தடவி அந்த பஞ்சால் 5 நிமிடங்கள் மெதுவாக வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து கொடுங்கள்‌.

அதன் பின்பு 5 நிமிடங்கள் இந்த ஜெல் உங்களது தோலின் மேல் நன்றாக ஊறட்டும். அதன் பின்பு இரண்டு நிமிடங்கள் மெதுவாக தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

அவ்வளவு தான். பத்து நிமிடங்களுக்கு முன்பு உங்களது கால் இருந்த நிறத்திற்கும், 10 நிமிடங்கள் கழித்து உங்கள் காலில் இருக்கும் நிறத்திற்கும் வித்தியாசத்தை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.

உங்களது காலில் அதிகப்படியான அழுக்குகள் இருந்தால் இந்த குறிப்பை பின்பற்றுவதற்கு முன், சுடு தண்ணீரில் கல் உப்பைப் போட்டு 10 நிமிடங்கள், உங்களது பாதங்களை ஊறவைத்து நன்றாக துண்டில் துடைத்துவிட்டு, அதன் பின்பு இந்த டிப்ஸை ட்ரை பண்ணா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

குறிப்பு :

சிலபேருக்கு சோடா உப்பு, தோலில் பட்டால் ஒத்துவராது தோல் அரிக்க ஆரம்பிக்கும்.

உங்களுடைய கையிலோ கால் பகுதியிலோ சிறிய இடத்தில் கொஞ்சம் இந்த இந்த சிரப்பை அப்ளை செய்து பாருங்கள். அரிப்பு இல்லாமல் இருந்தால் மட்டும் உங்கள் சருமத்திற்கு இதைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் இதை முகத்தில் போடாதீர்கள். முகச் சருமம் ரொம்பவும் நாசுக்கானது.

  • 144