ஞாளி, எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர், கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி , குக்குரன், கடுவாய், மடி,வடி, வங்கு, நயக்கன், பாகி, பாசி, முடுவல் செந்நாய், தோனாய் என பல பெயர்கள் உள்ளன.
இவற்றில் சில , குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும்.
சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய, ஒல்லியாய், உயரமாய், கழுத்து நீண்ட நாய்.
சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய்.
தோனாய் - தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது.
வங்கு என்பது புள்ளியுடைய நாய்.